ஞாயிறு, 1 டிசம்பர், 2013

மணிமன்றப் பொன்விழா மலர் - அமைப்புக் கூட்டம்

            30.11.2013 அன்று மாலை  மணிமன்றத்தின் நவம்பர்த் திங்கள் இயல்புக் கூட்டம் , கவிஞர் நா.முத்துநிலவன் நூலகத்தில் பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையி்ல் கூடியது.

         மன்றத் துணைத் தலைவர் நா.செந்தில்பாண்டியன் வரவேற்புரை யாற்றினார்.

         வேலை அறிக்கையினை நிறுவனர் பாவலர் பொன்.க.அளித்தார்.
அறிக்கையின் மீதான கருத்துப் பகிர்வு நடைபெற்றது.

         23.11.2013 நகர் மன்றத்தி்ல் திருக்குறள் கழக 59 ஆவது ஆண்டுவிழாவில் மணிச்சுடர் கலைக்கூடம் சார்பாக “இவர்கள் இன்று வந்தால் “ என்னும் நடப்பியல் நாடகத்தில் நடித்தவர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

        மட்டைப் பந்து விளையாட்டில் பல்வேறு சாதனைகள் புரிந்து ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர், பாரதரத்னா விருது பெற்ற அறிவியல்  அறிஞர் சி.ஆர்.ராவ் ஆகியோர்க்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

       கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப் பட்டன.

       1. மணிமன்ற பொன்விழா மலர்க்குழு கவிஞர் நா.முத்துநிலவன் அவர்கள் தலைமையில் (10 பேர் ) கொண்ட குழு அமைக்கப்பட்டது.

       2.பொன்விழா மலரில் மணிமன்றத்தின் தோற்றம், வளர்ச்சியும் மலர்ச்சியும், மணிமன்ற உறுப்பினர்களின் கலை, இலக்கிய . சமுதாயப் பணிகள், படைப்புகள் , புதுக்கோட்டையின் புகழ்பெற்ற கலைஇலக்கியவாதிகள் பற்றிய குறிப்புகள், புதுக்கோட்டை மாவட்டத்தின் சிறப்புகள்,  சமூக மாற்றத்திற்கான புதுக்கோட்டைப் படைப்பாளிகளின் சிறந்த படைப்புகள், புதுக்கோட்டை கலை இலக்கிய அமைப்புகளின் பார்வையில மணிமன்றம், ஆகிய படைப்புகள் இடம் பெறச்செய்தல்.
கல்விநிறுவனங்கள், வணிக நிறுவனங்களின் விளம்பரங்களைப் பெற்று  மலரில் வெளியிடுதல்.

       3.பொன்விழா ஆண்டின் தொடக்க நிகழ்வாக சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பரப்புச் செயலாக தமிழர் திருநாளையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தின் கல்வி நிறுவனங்கள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் 50,000 மரக்கன்றுகளை நடுதல்.

      4.மகாகவி பாரதியாரின் 133 ஆவது பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாட்டுப் போட்டியினை 13.12.2013 அன்று ஆக்ஸபோர்டு சமையல் கல்லூரியில் நடத்துதல் ( தலைப்பு  பாரதியாரின் நாட்டுப்பற்று, மொழிப்பற்றுப் பாடல்கள்)

     மேற்கண்ட முடிவுகளைத் தொடர்ந்து செயலாளர் சிதம்பர ஈசுவரன் நன்றி கூறினார்.
கூட்டத்தில்  கலந்து கொணடவர்கள்

1 கருத்து:

  1. அய்யா வணக்கம். என் வீடே நூலகமாக இருப்பதால், என் வீட்டில் நடந்த கூட்டத்தையே என் நூலகத்தில் நடந்ததாக எழுதிவிட்டீர்களோ? தவறிலலைதான், ஆனால் கந்தர்வன் நூலகம்போல முத்துநிலவன் நூலகம் என்றும் ஒன்று இருக்கிறதோ என்று நம் நண்பர்கள் கேட்க மாட்டார்களே? (எனக்குப் பிறகு எனது நூல்களெல்லாம் கந்தர்வன் நூலகத்திற்குத்தான் என்று நான் நினைத்திருக்கிறேன்) நன்றி.

    பதிலளிநீக்கு