ஞாயிறு, 29 மார்ச், 2015

2015 மார்ச்சு திங்களில் மலர்ந்தவை.மணிமன்றக் காலாண்டுக் கூட்டம்

             மணிமன்றத்தின் காலாண்டுக் கூட்டம் 21.03.2015 மாலை 6.30 மணிக்கு புதுக்கோட்டை பெரியார் நகர் 330 இலக்க இல்லத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மணிமன்றத்தின் தலைவர் திரு பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையேற்றார்.

                  செயலாளர் திரு ஆர்.குமார் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

                 கவிஞர் மு.கீதா உலக மகளிர் நாள் பற்றி கருத்துரை வழங்கினார்.
உழைக்கும் பெண்களின் உரிமைகள்,  சாதனைப் பெண்கள், பெண்களுக்கெதிராக நடக்கும் வன்முறைகள் பற்றிய கருத்துப் பகிர்வி்ல் நா.செந்தில்பாண்டியன், ஆ.குமார், இரா.செல்லையா. சிதம்பர ஈசுவரன் ஆகியோர் பங்கேற்றனர்..

                 மன்ற நிருவாகி பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் மார்ச்சு திங்களில் மலர்ந்த தமிழறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள் அரசியலார் சிறப்புகளை எடுத்துரைத்தார்.

            தஞ்சைத் தரணியில் மீத்தேன் வாயு எடுக்கும் முயற்சி, தேனி- பொட்டிபுரத்தில் நியுட்ரினோ ஆய்வு மையம் அமைத்தல் ஆகியன பற்றிய  உறுப்பினர்களின் கருத்துகள் பகிரப்பட்டன. அறிவியல் வளர்ச்சியினை ஆதரிக்கும் அதே வேளையில் மனிதகுல வாழ்வியல் பாதிப்பில்லாத நிலையினையும் கருத்தில் கொண்டே இத்தகு அறிவியல் வளர்ச்சி அமைய வேண்டும் என்பதனை பாவலர் பொன்.க வலியுறுத்தினார்.

         அடுத்த ஆண்டுவிழாத் திட்டமிடல் கூட்டம் மே திங்கள் இரண்டாம் வாரம் நடத்துவது என முடிவாற்றப்பட்டது. 

          மன்றப் பொருளாளர் சிதம்பர ஈசுவரன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவு்ற்றது.