திங்கள், 13 ஏப்ரல், 2015

உலக புத்தகநாள்-பாவேந்தர் நாள் விழா

                        12.04.2015 அன்று, புதுக்கோட்டை பெரியார் நகர் 330, இலக்க இல்லத்தில் மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் அவசரக்கூட்டம் மணிமன்றத் தலைவர் திரு பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

                 மன்றத் துணைச் செயலாளர் திரு மகா.சுந்தர் வரவேற்றார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
                 1.இரங்கல் தீர்மானம்-
                 ஏப்ரல் 9 ல் காலமான ஞானபீட விருது, சாகித்திய அகாதமி விருது, பத்மபுசன் விருது பெற்ற தமிழ் இலக்கிய எழுத்தாளர் செயகாந்தன் அவர்களுக்கான இரங்கல் செய்தியினை மகா.சுந்தர் முன்மொழிந்தார்.                         தன் சிம்மக்குரலால் கலைத்துறையில் நெடிய இசைப்பயணம் செய்த இசைமுரசு நாகூர் அனிபா அவர்கள் காலமான இரங்கல் செய்தியினை சிதம்பர ஈசுவரன் முன்மொழிந்தார். 
             ஆந்திராவில் அன்முறையாக அப்பாவித் தமிழர் இருபதுபேர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து கவிஞர் மு.கீதா இரங்கலில் குறிப்பிட்டார். 
அவர்களுக்கு மன்றம் தன் இரங்கலை மவுன அஞ்சலியாகச் செலுத்தியது.
                   
            2. பாராட்டுத் தீர்மானம்
            புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம்  ஐ.எஸ்.ஓ 9001-2008 தரச்சான்று பெற்றமைக்காக முதன்மைக்கல்வி அலுவலர்க்கும் அதற்காக உழைத்த கல்வித்துறையினருக்கும் இம்மன்றம் பாரட்டு தெரிவிக்கின்றது.
              3.கலைத்திறன் போட்டிகள் நடத்துதல் 
              ஏப்பிரல் 23 உலக புத்தகநாள், ஏப்-29 பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் இவற்றையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, பாட்டு, வினாடி-வினாப் போட்டிகள் நடத்திட மன்றம் முடிவு செய்தது. 

             அதன்படி 24.04.2015 காலை 10 மணிக்கு, புதுக்கோட்டை பேருந்து நிலைய வளாகத்துள் அமைந்துள்ள ஆக்ஸ்போர்டு சமையற்கலைக் கல்லூரியில் “அறிவை விரிவு செய்” புதியதோர் உலகம் செய்வோம்” என்னும் தலைப்புகளில் கலைஅறிவியல்,கல்வியியல், செவிலியர், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டியும், “பாரதிதாசன் பாடல்கள்” - பாட்டுப் போட்டியும், 
“புத்தகங்களும் படைப்பாளிகளும்” என்ற தலைப்பில் வினாடி-வினாப் போட்டியும் நடத்திட முடிவாற்றப்பட்டது.
             
               போட்டி வெற்றியாளர்களுக்கு நூல்களைப் பரிசாக வழங்கவும், பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

             இதற்கான செலவினங்களுக்கு மரகதவள்ளி அறக்கட்டளை ஆயிரம் ரூபாயும், எஞ்சிய செலவினங்களை மன்ற உறுப்பினர்கள் பகிர்ந்தளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

          நிறைவாக மன்றப் பொருளாளர் சிதம்பர ஈசுவரன் நன்றி கூறினார்.

ஞாயிறு, 29 மார்ச், 2015

2015 மார்ச்சு திங்களில் மலர்ந்தவை.மணிமன்றக் காலாண்டுக் கூட்டம்

             மணிமன்றத்தின் காலாண்டுக் கூட்டம் 21.03.2015 மாலை 6.30 மணிக்கு புதுக்கோட்டை பெரியார் நகர் 330 இலக்க இல்லத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மணிமன்றத்தின் தலைவர் திரு பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையேற்றார்.

                  செயலாளர் திரு ஆர்.குமார் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

                 கவிஞர் மு.கீதா உலக மகளிர் நாள் பற்றி கருத்துரை வழங்கினார்.
உழைக்கும் பெண்களின் உரிமைகள்,  சாதனைப் பெண்கள், பெண்களுக்கெதிராக நடக்கும் வன்முறைகள் பற்றிய கருத்துப் பகிர்வி்ல் நா.செந்தில்பாண்டியன், ஆ.குமார், இரா.செல்லையா. சிதம்பர ஈசுவரன் ஆகியோர் பங்கேற்றனர்..

                 மன்ற நிருவாகி பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் மார்ச்சு திங்களில் மலர்ந்த தமிழறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள் அரசியலார் சிறப்புகளை எடுத்துரைத்தார்.

            தஞ்சைத் தரணியில் மீத்தேன் வாயு எடுக்கும் முயற்சி, தேனி- பொட்டிபுரத்தில் நியுட்ரினோ ஆய்வு மையம் அமைத்தல் ஆகியன பற்றிய  உறுப்பினர்களின் கருத்துகள் பகிரப்பட்டன. அறிவியல் வளர்ச்சியினை ஆதரிக்கும் அதே வேளையில் மனிதகுல வாழ்வியல் பாதிப்பில்லாத நிலையினையும் கருத்தில் கொண்டே இத்தகு அறிவியல் வளர்ச்சி அமைய வேண்டும் என்பதனை பாவலர் பொன்.க வலியுறுத்தினார்.

         அடுத்த ஆண்டுவிழாத் திட்டமிடல் கூட்டம் மே திங்கள் இரண்டாம் வாரம் நடத்துவது என முடிவாற்றப்பட்டது. 

          மன்றப் பொருளாளர் சிதம்பர ஈசுவரன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவு்ற்றது.

திங்கள், 12 ஜனவரி, 2015

மணிமன்றம்- பொறுப்பாளர் தேர்தல்.

பொன்விழாக் கண்ட மணிமன்றத்தின் 2015-16 ஆண்டுகளுக்கான பொறுப்பாளர்கள் தேர்தல் 10.01.2015 அன்று மாலை 330.பெரியார் நகர் இல்லத்தில் நடைபெற்றது.

தேர்தல் ஆணையாளராக மன்ற நிறுவனர் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் செயல்பட்டார்.

கீழ்க்கண்டவர்கள் போட்டியின்றி 2015-16 ஆம் ஆண்டிற்கான மணிமன்றப் பொறுப்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
தலைவர் - திரு பொன்.பாலசுப்பிரமணியன்  எம்.ஏ., எம்.ஏ
செயலாளர் - திரு ஆ.குமார் பி.ஏ.,
பொருளாளர் - திரு சிதம்பர.ஈசுவரன் எம்.ஏ., பி.எட்.,டி.ஏ.எஸ்.,
துணைத் தலைவர்கள் - புலவர் மு.பா.,எம்.ஏ.,எம்.எட்., எம்.பில்
                                                             - திரு.நா.செந்தில் பாண்டியன் பி.ஏ.,
துணைச் செயலாளர்கள் - கவிஞர் மகா.சுந்தர். எம்.ஏ., எம்.எட்.,
                                       - கவிஞர் மு.கீதா எம்.ஏ.எம்.எட்.,எம்.பில்.,   
செயற்குழு உறுப்பினர்கள் 1. திரு.ரெ.சு.காசிநாதன் எம்.எஸ்ஸி., எம்.எட்.,
                                                       2. திரு.ச.கோகர்ணேசன் பி.ஏ.,
                                                       3. திரு.இரா.செல்லையா பி.ஏ.,
                                                       4.திரு.சுப.இராசேந்திரன்
                                                       5. திரு.வெ.பரமசிவம்.
 கூட்ட நடவடிக்கைகள் -1 இவ்வாண்டில் கலைஇலக்கியத்தில் சிறந்த சேவைசெய்த மணிமன்ற உறுப்பினர்களுக்குப் பாராட்டு செய்யப்பட்டது. 

புதிய மரபுகள், கம்பன் தமிழும் கணினித் தமிழும். முதல்மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே” ஆகிய நூல்களை வெளியிட்ட கவிஞர் நா.முத்துநிலவன்,
 2. “நிலவோடு பேசும் நேரம்” என்னும் நூலை வெளியிட்டு கவிஞர் செ.சுவாதி,
 3. கவிராசன் இலக்கியக் கழகத்தால் நல்லாசிரியர் விருது பெற்றவரும் “ஒருகோப்பை மனிதம் ” என்னும் கவிதை நூலை வெளியிட்டவருமான கவிஞர் மு.கீதா
,4. பத்தாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூல் செய்யுள் பகுதிகளை நாடக வடிவில் காணொளி வட்டாக வெளியிட்ட கவிஞர் மகா.சுந்தர் மற்றும் மு.கீதா, 

5.க்ம்பன்கழகப் போட்டிகளில் இரண்டாம் இடம் பெற்ற பாவேந்தர் பள்ளியின் ஆலோசகர் கவிஞர் ரெ.சு.காசிநாதன் ஆகியோர் மன்றத்தால் பாராட்டப் பெற்றனர்.

2. இவ்வாண்டில் சிறுகதை எழுத்தாளர் திரு.செம்பை மணவாளன் அவர்கள் மன்றத்தில் தன்னை புதிய உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

3. இவ்வாண்டு செயல்திட்டத்தில் வழமையான திங்கள் கூட்டங்களுக்குப் பதிலாக மூன்று திங்களுக்கு ஒருமுறை தமிழ்ச் சான்றோர் ஒருவரை அழைத்துச் சிறப்புக் கூட்டம் நடத்துவது என முடிவாற்றப்பட்டது.

4. இரண்டு ஆண்டுகளாக உறுப்பினர் கட்டணம் செலுத்தாமலும் மன்றத்தின் நடவடிக்கைகளில் மூன்று திங்கள்கள் எவ்வித அறிவிப்புமின்றிக் கலந்து கொள்ளாத உறுப்பினர்கள் தாங்கள் மன்றத்தில் தொடர்ந்து செயல்பட இயலாமல் தாங்களே விலகிக் கொண்டவர்களாக அடுத்த கூட்டத்தில் இறுதி செய்ய முடிவானது.

புதிய பொறுப்பாளர் சார்பில் மணிமன்றச் செயலாளர் திரு ஆ.குமார் நன்றி கூற கூட்டம் இனிதே முடிவுற்றது.