வெள்ளி, 21 மார்ச், 2014

மணிமன்ற பொன்விழா - திட்ட வரைவுக் கூட்டம்.

                      20.03.2014 மாலை மணிமன்றப் பொன்விழா திட்ட வரைவுக் கூட்டம் மன்றத் தலைவர் திரு. பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

                   மன்றச் செயலாளர் திரு.சிதம்பர.ஈசுவரன் வரவேற்றார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட வரைவுகள் மேற்கொள்ளப் பட்டன.

1. மணிமன்றப் பொன்விழாவினை முன் கூட்ட முடிவின்படி 2014 சூலைத் திங்கள் இரண்டாம் அல்லது  மூன்றாம் வார சனி, ஞாயிறு கிழமைகளில் இரு நாள்கள் நடத்துவது.

2.பொன்விழா தொடக்க விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் திறன்வெளிப்பாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது. ( போட்டிகள் முன்னதாக நடத்துவது )
3.முதல்நாள் நிகழ்வுகளில் இயல் ( மன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் பட்டிமன்றம் ) கல்வி, மகளிர் . சமூக மேம்பாட்டினை கருவாகக் கொண்ட 45 நிமிட சமூக மேடை நாடகம்  அரங்கேற்றுவது ( மன்ற உறுப்பினர்கள் பங்கு )
4.இரண்டாம் நாள் மாலை நிறைவு விழாவில் வழக்கமான முதல் மாணவர்கள் விருது வழங்கும் விழா, முழுத்தேர்ச்சிப் பள்ளிகளுக்கும் சாதனையாளர்களுக்கும் விருதுகள் வழங்கும் விழா இவற்றோடு மணிமன்றப் பொன்விழா மலர் வெளியிடுவது
5.இரண்டாம் நாள் தொடக்கத்தி்ல் மன்ற உறுப்பினர் பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சி நடத்துவது.
6. பாவலர பொன்.க வின்  தமிழ்ச்சீர்மை,சமுதாய விழிப்புணர்வுப் பாடல் குறுவட்டு வெளியிடுவது.
7. பொன்விழா மலர் 100 பக்கங்கள் கொண்டதாகவும், அதில் மன்றத் தோற்றம் வளர்ச்சி, மன்ற உறுப்பினர் சிறப்புகள். புதுக்கோட்டையின் புகழ்ச் சான்றுகள், இலக்கிய, சமூக அமைப்புகளின் பார்வையில் மணிமன்றம் , விளம்பரங்கள் என்பவை இடம் பெறல்.
8. மலர் தயாரிப்புக் குழுவாக பாவலர் பொன்.க.,கவிஞர் நா.முத்துநிலவன், முனைவர் வீ,கே.கஸ்தூரிநாதன், புலவர் மகா.சுந்தர், கவிஞர்கள் மு.கீதா, செ.சுவாதி ஆகியோர் இறுதிப் படுத்தப் பட்டனர்.
9.மணிமன்றம் - மரகதவள்ளி அறக்கட்டளை உறுப்பினர்கள் தங்கள் தன்விவரக் குறிப்புகளை 31.03.2014 நாளுக்குள் மலர்க்குழுஅவர்களுக்கு அனுப்பிடக் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
10.  மலரில் வெளியிடத்தக்க விளம்பரங்களை மன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் குறைந்தது இரண்டு விளம்பரங்கள்  பெற்றுத்தரல் வேண்டும்.

    மேற்கண்ட வரைவுகளுக்குப்பின்னர் மன்றத் துணைத் தலைவர் நா.செந்தில்பாண்டியன் நன்றி கூறினார்.