திங்கள், 13 ஏப்ரல், 2015

உலக புத்தகநாள்-பாவேந்தர் நாள் விழா

                        12.04.2015 அன்று, புதுக்கோட்டை பெரியார் நகர் 330, இலக்க இல்லத்தில் மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் அவசரக்கூட்டம் மணிமன்றத் தலைவர் திரு பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

                 மன்றத் துணைச் செயலாளர் திரு மகா.சுந்தர் வரவேற்றார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
                 1.இரங்கல் தீர்மானம்-
                 ஏப்ரல் 9 ல் காலமான ஞானபீட விருது, சாகித்திய அகாதமி விருது, பத்மபுசன் விருது பெற்ற தமிழ் இலக்கிய எழுத்தாளர் செயகாந்தன் அவர்களுக்கான இரங்கல் செய்தியினை மகா.சுந்தர் முன்மொழிந்தார்.                         தன் சிம்மக்குரலால் கலைத்துறையில் நெடிய இசைப்பயணம் செய்த இசைமுரசு நாகூர் அனிபா அவர்கள் காலமான இரங்கல் செய்தியினை சிதம்பர ஈசுவரன் முன்மொழிந்தார். 
             ஆந்திராவில் அன்முறையாக அப்பாவித் தமிழர் இருபதுபேர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து கவிஞர் மு.கீதா இரங்கலில் குறிப்பிட்டார். 
அவர்களுக்கு மன்றம் தன் இரங்கலை மவுன அஞ்சலியாகச் செலுத்தியது.
                   
            2. பாராட்டுத் தீர்மானம்
            புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம்  ஐ.எஸ்.ஓ 9001-2008 தரச்சான்று பெற்றமைக்காக முதன்மைக்கல்வி அலுவலர்க்கும் அதற்காக உழைத்த கல்வித்துறையினருக்கும் இம்மன்றம் பாரட்டு தெரிவிக்கின்றது.
              3.கலைத்திறன் போட்டிகள் நடத்துதல் 
              ஏப்பிரல் 23 உலக புத்தகநாள், ஏப்-29 பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் இவற்றையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, பாட்டு, வினாடி-வினாப் போட்டிகள் நடத்திட மன்றம் முடிவு செய்தது. 

             அதன்படி 24.04.2015 காலை 10 மணிக்கு, புதுக்கோட்டை பேருந்து நிலைய வளாகத்துள் அமைந்துள்ள ஆக்ஸ்போர்டு சமையற்கலைக் கல்லூரியில் “அறிவை விரிவு செய்” புதியதோர் உலகம் செய்வோம்” என்னும் தலைப்புகளில் கலைஅறிவியல்,கல்வியியல், செவிலியர், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டியும், “பாரதிதாசன் பாடல்கள்” - பாட்டுப் போட்டியும், 
“புத்தகங்களும் படைப்பாளிகளும்” என்ற தலைப்பில் வினாடி-வினாப் போட்டியும் நடத்திட முடிவாற்றப்பட்டது.
             
               போட்டி வெற்றியாளர்களுக்கு நூல்களைப் பரிசாக வழங்கவும், பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

             இதற்கான செலவினங்களுக்கு மரகதவள்ளி அறக்கட்டளை ஆயிரம் ரூபாயும், எஞ்சிய செலவினங்களை மன்ற உறுப்பினர்கள் பகிர்ந்தளிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

          நிறைவாக மன்றப் பொருளாளர் சிதம்பர ஈசுவரன் நன்றி கூறினார்.