1964 ஆம் ஆண்டில் தன்னார்வம் மிக்க இளைஞர்களைக் கொண்டு புதுக்கோட்டை பிச்சத்தான் பட்டி பகுதியில் கலை மற்றும் கல்வி தொண்டிற்காக நிறுவனர் பொன் கருப்பையா அவர்களை நிர்வாகியாகக் கொண்டு ஆரம்பிக்கப்பெற்ற நிறுவனம்
திங்கள், 22 ஜூலை, 2013
மணிமன்றம் - மரகதவள்ளி அறக்கட்டளை 49 ஆவது ஆண்டு முப்பெரும் விழா.
மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் 49 ஆவது முப்பெரும் விழா திருவள்ளுவர் ஆண்டு 2044 கடகம் 4 காரிக்கிழமை ( 20.07.2013 ) அன்று மாலை 6.00 மணிக்கு, புதுக்கோட்டை எஸ்.வி.எஸ். சீதையம்மாள் திருமண அரங்கில் நடைபெற்றது. கவிஞர்கள் செ.சுவாதி, மு.கீதா ஆகியோர் விழாவிற்கு வந்தவர்களை இனிதே வரவேற்றனர்.
மன்றத்தின் உறுப்பினர்கள் ஆ.குமார், ச.கோகர்ணேசன் ஆகியோர் விருதாளர் வருகையினைப் பதிவு செய்தனர்.
விழாவின் கலைநிகழ்வாக மன்றச் செயலாளர் சிதம்பர ஈசுவரன் அவர்களின் இருகுரல் இன்னிசை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாற்காலி என்னும் பேச்சில்லா குறு நாடகம் கவிஞர் நீலா தலைமையில் நடைபெற்றது. நாடகத்தில் கவிஞர் செ.சுவாதி, ஆ.குமார், கவிஞர் கண்ணதாசன், வள்ளியப்பன், மணிகண்டன், ஜெய்சங்கர் ஆகியோர் சிறப்பாக நடித்தனர்.
முப்பெரும் விழாவின் முதல் நிகழ்வாக “ சாதனையாளர்களுக்குப் பாராட்டு“ விழாவிற்கு மணிமன்றத் தலைவர் பொன.பாலசுப்பிரமணியன் தலைமை ஏற்றார். மாணவச் சாதனையாளர்கள் மேடைக்கு அழைத்து சிறப்பிடத்தில் அமர்த்தப் பட்டனர்.
தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடிய மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் நிறுவனர் பாவலர் பொன்.கருப்பையா வரவேற்புரையினை ஆற்றினார். விழாவிற்கு தமிழிசைச் சங்கத் தலைவர் திரு சுப்பிரமணிய காடுவெட்டியார், ஆர்.ஏ.குமாரசாமி ஆகியோர் முன்னி லை யேற்றனர்.
நிகழ்ச்சியினை கவிஞர் ரெ.சு.காசிநாதன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
ஆண்டறிக்கையினை புலவர் மு.பாலசுப்பிரமணியன் அளித்தார்.சிறப்பு விருந்தினர்களுக்கு மன்றச் செயற்குழுவினர் நூல்களை அன்பளித்துச் சிறப்புச் செய்தனர்.
தலைவர் உரையினைத் தொடர்ந்து... வாரணாசியில் நடைபெற்ற தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் “வெப்ப மேம்பாட்டில் சாண எருவாட்டி“ என்னும் ஆய்வினை அளித்து இளம் விஞ்ஞானியாகச் சிறப்புப் பெற்ற தச்சன்குறிச்சி தூயமரியன்னைப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி ஆ.அகஸ்டாவின் சாதனைகளையும், வேளாண் தொழிலுக்கு புதிய கண்டுபிடிப்பான ” தானியங்கி நீரிறைக்கும் பொறி” யினைக் கண்டுபிடித்த அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ச.மணிவண்ணன், இரா.சதீஸ்குமார், ஆறு.பாலாஜி ஆகியோரை மரகதவள்ளி அறக்கட்டளையின் அறங்காவலர் பொன்.க.மதிவாணன் அறிமுகம் செய்தார்.
பொறியியல் மாணவர்களின் கண்டுபிடிப்புக் கருவியினை அப்பொறியியல் மாணவர்கள் செயல்விளக்கம் செய்து காண்பித்தது சிறப்பாக இருந்தது.
சாதனையாளர் விருதுகளை புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன்அவர்கள் வழங்கினார் . சாதனையாளர்களைக் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் வாழ்த்தி உரையாற்றினார்.
அவர் தனதுரையில் மன்றத்தின் தொடர்ந்த இப்பணியினைப் பாராட்டினார். வளரும் சாதனையாளர்களுக்கு முதுகில் செய்ய வேண்டிய ஒரே வேலை அவர்களைத் தட்டிக் கொடுப்பதுதான். சரியான களம் கிடைக்குமானால் நிறையச் சாதனையாளர்கள் உருவாவார்கள்.. போதிப்பதிலும் சாதிக்க வைப்பதே சமுதாய, நாட்டின் வளர்ச்சிக்கான அடித்தளம் என்பதைக் குறிப்பிட்டுச் சொன்னது சிறப்பாக இருந்தது.
அதனையடுத்து இந்தியக் குடியரசுத் தலைவரிடம் “செம்மொழி இளம் தமிழறிஞர் விருது” பெற்ற புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சு.மாதவன் அவர்களை கவிஞர் ஆர்.நீலா அறிமுகம் செய்தார். அவருக்கான சாதனை விருதினை ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன மூத்த அறிவியல் அறிஞர் திரு இரா.இராஜ்குமார் அவர்கள் வழங்கிச் சிறப்புரையாற்றினார்.
இரண்டாவது நிகழ்வாக புதுக்கோட்டை மாவட்ட அளவில் 10,12 வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர் எண்மர் மேடைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களை வாழ்த்தி மருத்துவர் ச.இராமதாசு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட அளவில் முதல் மூன்று மாணவர்களுக்கான விருதுகளை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் வழங்கினார். த.மு.எ.க.ச . மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் நா.முத்துநிலவன் முழுத்தேர்ச்சி பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர்களைப் பாராட்டியும், மாணவர் திறமையினை மதிப்பெண்கள் மட்டும் தீர்மானிப்பதில்லை அவர்களை மாண்புள்ள சமூகச் சிந்தனையாளர்களாக உருவாக்கும் வாழ்க்கைக் கல்வியே இன்றியமையாதது என்னும் கருத்தை வலியுறுத்தி உரையாற்றினார்.
விழாவின் நிறைவுரையாக முதன்மைக் கல்வி அலுவலர் அரசுப் பள்ளி மாணவர், ஆசிரியர் சிறப்புத் திறன்களையும் கடந்த ஆண்டினைவிட இவ்வாண்டு புதுக்கோட்டை மாவட்ட அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ள நிலைமையினையும் அதிக முழுத்தேர்ச்சிப் பள்ளிகள் அதற்குச் சான்றாக இருப்பதையும் சுட்டிக்காட்டினார். அவர் தனது கல்விப் பயணத்தின் பட்டறிவினை எடுத்துச் சொல்லி ஒவ்வொருவரின் உயர்வு அவரவர் முனைப்பு ஈடுபாட்டில்தான் இருக்கிறது. எல்லா மாணவரிடத்தும் திறன்கள் அடங்கிக்கிடக்கின்றன அவர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப் பட்டால் எல்லா நிலைகளிலும் உயர்வார்கள் ... இதில் பள்ளி வேறுபாடுகள் இல்லை என்பதைப் பதிவு செய்தார்.
அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை நகரளவு 17 பள்ளிகளைச் சேர்ந்த 22 முதல் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை தங்கள் பெற்றோருடன் மேடைக்கு வந்து மாணவர்கள் பெற்றது சிறப்பாக இருந்தது. விருதுகளோடு பாராட்டுச் சான்றிதழ், நூல்களும் விருதாளர்களுக்கு வழங்கப் பட்டது. அரங்க ஆளுமையினை நா.செந்தில்பாண்டியன்,சங்கர நாராயணன் கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் செம்மையாய்ச் செய்தனர்.
மூன்றாவது நிகழ்வாக... புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவில் மேல்நிலையில் முழுத்தேர்ச்சி பெற்ற கீரமங்கலம், கொத்தமங்கலம், வெண்ணாவல்குடி, கல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கும், இடைநிலைத்தேர்வுகளில் முழுத்தேர்ச்சி பெற்ற குலமங்கலம் வடக்கு, கொத்தமங்கலம், கீழாநிலைக்கோட்டை, மரமடக்கி, பள்ளத்திவிடுதி, சுனையக்காடு, ஆயிங்குடி தெற்கு, தெம்மாவுர், எஸ்.குளவாய்ப்பட்டி, பொன்னன்விடுதி, மோலுடையான்பட்டி, கிருஷ்ணாஜிப் பட்டினம், மதியநல்லூர், வெள்ளாளவிடுதி, திருமணஞ்சேரி, சூரன்விடுதி, கே.ராசியமங்களம், மேலூர், திருவப்புர் ஆகிய 23 பள்ளிகளுக்கான “முழுத்தேர்ச்சி விருது“களை முதன்மைக் கல்வி அலுவலர் வழங்க அவ்வப்பள்ளித் தலைமையாசிரியர்கள் பெற்றுமகிழ்ந்தனர்.
முதல் மாணவர்களை மன்றத் துணைச் செயலாளர் புலவர் மகா.சுந்தரும், முழுத்தேர்ச்சிப் பள்ளிகளை மன்றச் செயலாளர் சிதம்பர ஈசுவரனும் அறிமுகம் செய்தனர்.
விழா பற்றிய பின்னூட்டக்கருத்தினை கொத்தமங்கலம் மகளிர் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் வழங்கினார்.
விருது பெற்றவர் சார்பாக முனைவர் சு.மாதவன் ஏற்புரை வழங்கினார்.
மன்றத் துணைத் தலைவர் நா.செந்தில்பாண்டியன் நன்றியுரையாற்றினார்.
வருகைபுரிந்த அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது. விருது பெற்றோர்க்கு பதிவின்போது அடையாள அட்டையும் ரொட்டிப் பொட்டலமும் வழங்கப் பட்டது.
விழா இரவு 9.15க்கு நிறைவுற்றது. தொலைவிலிருந்து விருதுபெற வந்தவர்களுக்குப் பயணப்படி வழங்கப் பட்டது.
அரங்கிலிருந்த அனைவருக்கும் உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் சண்முக பழனியப்பன் அவர்கள் சார்பாக சிற்றுண்டி வழங்கப்பட்டது. விருந்தோம்பல் பணியினை வெ.பரமசிவம், சு.இராசேந்திரன், கவிஞர்கள் செ.சுவாதி, கீதா, வள்ளியப்பன், சங்கரநாராயணன், இளந்தொண்டர்கள் சொ.இளங்கோ, கு.தமிழ்மணி ஆகியோர் கனிவுடன் ஆற்றினர்.
விருதோடு விருந்தும் உண்டு மகிழ்வோடு திரும்பினர் அனைவரும்.

ஞாயிறு, 30 ஜூன், 2013
மணிமன்ற 49 ஆவது ஆண்டுவிழா - சிறப்புக் கூட்டம்
30.06.2013 அன்று முற்பகல் மணிமன்றத்தின் சிறப்புக் கூட்டம் மன்றத் தலைவர் திரு பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையி்ல் நடைபெற்றது. மன்றச் செயலாளர் திரு சிதம்பர ஈசுவரன் வரவேற்புரையாற்றினார்.
49 ஆவது ஆண்டுவிழா தொடர்பாக கடந்த கூட்டத்தில் வடிவமைக்கப் பட்ட தீர்மானங்கள் இறுதிவடிவம் பெற்றன.
விழாவில் முதல் மாணவர் விருது வழங்க மாவட்ட உயர் அலுவலர்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரையும். மாணவச் சாதனையாளர்களைப் பாராட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ராஜ்குமார் அவர்களையும், வாழ்த்துரைக்க முத்துநிலவன், தங்கம்மூர்த்தி ஆகியோரையும் அழைக்க உறுதிசெய்யப் பட்டது.
மன்ற உறுப்பினர் பங்கேற்கும் கலைநிகழ்ச்சி கவிஞர் நீலா இன்னும் மூன்று நாள்களுக்குள் உறுதி செய்ய வில்லையெனில் சிதம்பர ஈசுவரன் அவர்களின் இருகுரல் இன்னிசை நிகழ்ச்சி உறுதிப்படுத்த தீர்மானிக்கப் பட்டது.
மன்ற உறுப்பினர் வீ.கே.கஸ்தூரிநாதன் ( எ ) வீ.கருப்பையன் 28.06.2013 அன்று மாமன்னர் கல்லூரியி்ல் நடைபெற்ற பொது வாய்மொழித் தேர்வி்ல் “ மெய்ப்பாட்டு நோக்கில் மறுமலர்ச்சிப் பாடல்கள்“ என்னும் ஆய்வை சமர்ப்பித்து முனைவர் பட்டத்திற்கு பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்குப் பரிந்துரைக்கப் பட்டதைப் பாராட்டி அவருக்கு நினைவு நூல் பரிசளிக்கப் பட்டது.
அண்மையி்ல் புதுக்கோட்டை விசயரெகுநாதபுரம் பள்ளி மாணவர்கள் 7 பேர் ஊர்தி விபத்தில் மரணமடைந்ததற்கு மன்றம் இரங்கலைத் தெரிவிக்கிறது.
உத்தர்கண்டில் இயற்கைச் சீற்றத்தில் உயிரிழந்தோர்க்கும், அங்கு மீட்புப் பணியின் போது இன்னுயிர் நீத்த மதுரை விமானி பிரவீன் அவர்களுக்கும் மன்றம் தனது இரங்கலைத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
நிறைவாக மன்றத் துணைச் செயலாளர் நா.செந்தில்பாண்டியன் நன்றிகூற கூட்டம் நிறைவுற்றது.

ஞாயிறு, 2 ஜூன், 2013
மணிமன்ற 49 ஆவது ஆண்டுவிழா-திட்டமிடல் கூட்டம்
02.06.2013 மாலை மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் 49 ஆவது ஆண்டு திட்டமிடல் கூட்டம் புதுக்கோட்டையில் மன்றத் தலைவர் திரு பொன்.பாலசுப்பிர மணியன் அவர்கள் தலைமையி்ல் நடைபெற்றது.
கவிஞர் ஆர்.நீலா வரவேற்புரையாற்றினார்.
தலைவர் 49ஆவது ஆண்டுவிழா பற்றிய முன்னுரை வழங்கினார். மன்ற நிருவனர் புலவர் பொன்.கருப்பையா ஆண்டுவிழாத் திட்டங்களை முன்வைத்து விளக்கினார். கருத்துகள் மீதான விவாதங்களுக்குப் பிறகு கீழ்க்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப் பட்டன.
1 .மன்ற 49 ஆவது ஆண்டுவிழாவினை எதிர்வரும் 20.07.2013 அன்று வழக்கம்போல் எஸ்.வி.எஸ்.சீதையம்மாள் திருமண அரங்கில் நடத்துவது.
2. ஆண்டுவிழாவில் 2013 மேல்நிலை, இடைநிலை அரசு பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அரசு, அரசுநிதிஉதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விருதுகள் வழங்குவது.
3.நகர எல்லைக்குட்பட்ட அரசு, அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை, இடைநிலை 2013 அரசு பொதுத்தேர்வுகளில் பள்ளி வாரியாக முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்குவது.
4.புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில், 2013 அரசு பொதுத்தேர்வுகளில் . மேல்நிலை,
இடைநிலைத் தேர்வுகளில் முழுத்தேர்ச்சி பெற்ற அரசு,அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்குவது.
5.சண்முகநாதன் பொறியியல் கல்லூரி புதிய கண்டுபிடிப்புக்கான மாணவர் சாதனையாளர் மூவர்க்கும், தச்சன்குறிச்சி இளம் விஞ்ஞானி மாணவர் ஒருவருக்கும் விருதுகள் வழங்குவது.
6. செம்மொழி இளம் தமிழறிஞர் விருது பெற்ற மாமன்னர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் சு. மாதவன் அவர்களைப் பாராட்டி விருது வழங்குவது.
7.ஆண்டுவிழாவில் கவிஞர் ஆர் நீலா ஒருங்கிணைப்பில் மன்ற உறுப்பினர் எழுவர் பங்குபெறும் கல்வி விழிப்புணர்வு நாடகம் (30 நிமிடங்கள்) மற்றும் சிதம்பர ஈசுவரன் பங்கேற்கும் இருகுரல் இன்னிசை நிகழ்ச்சியை(15 நிமிடம்) நடத்துவது.
8. ஆண்டுவிழாச் செலவினங்களுக்கு மரகதவள்ளி அறக்கட்டளையின் பங்களிப்பு நிதி( ரூ5000) உடன் மன்ற உறுப்பினர்கள் தலா ரூ 1000 வழங்குவது என முடிவாற்றப்பட்டது.
9.விழாப் பணிக்குழு கடந்த ஆண்டு போலவே இவ்வாண்டும் செயல்படுவது.
10.விழாவிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அரசு உயர் அலுவலர், சமூக ஆர்வலர் ஐவர் ஆகியோரை அழைப்பது.
ஊரக வளர்ச்சி வங்கி இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட மன்ற உறுப்பினர் திரு நா. மணிகண்டன் அவர்கள் பாராட்டப் பட்டார்.
நிறைவில் மன்றச் செயலாளர் திரு.சித.ஈசுவரன் நன்றி கூறினார்.

வியாழன், 9 மே, 2013
மன்ற மார்ச்சுத் திங்கள் கூட்டம்.
மணிமன்றத்தின் திங்கள் கூட்டம் 30.03.2013 அன்று விடுதியில் மன்றத்தலைவர் திரு பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையி்ல் நடைபெற்றது.
மன்றத் துணைச் செயலாளர் புலவர் மகா.சுந்தர் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
புதிய உறுப்பினராக கவிஞர் சுவாதி மன்றத்தில் இணைந்தார்.
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. ஈழத்தமிழர் இனப் படுகொலைத் தொடர்பாக ஐ.நா.பாதுகாப்புசபை கொண்டு வரும் தீர்மானத்திற்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டுமென்றும். அதற்காக தமிழகமெங்கும் நடக்கும் மாணவர் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவினை மன்றம் அளிப்பது எனத் தீர்மானிக்கப் பட்டது.
2.“சிலம்பின் சிலிர்ப்பு “ காப்பிய நாடகத்தை வெளி அரங்கி்ல் நடத்த, இயக்குநர் நடிகர்கள் இசைவிற்கேற்ப முடிவு செய்வது எனத் தீர்மானிக்கப் பட்டது.
3. மன்றத்தி்ன் 49 ஆவது ஆண்டுவிழாவினை சூலைத்திங்கள் மூன்றாம் வாரத்தில் நடத்துவது.
அவ்விழாவில் கடந்த ஆண்டினைப் போலவே புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு, மற்றும் நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளி்ல் பயின்று 2013ல் 10,12 அரசுப் பொதுத் தேர்வுகளி்ல் பள்ளி அளவி்ல் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், வருவாய் மாவட்ட அளவி்ல் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கிச் சிறப்பிப்பது என்றும் முடிவாற்றப் பட்டது.
4.அவ்விழாவில் மாணவச் சாதனையாளர் மூவருக்கும், இளம் செம்மொழி அறிஞர் விருது பெற்ற முனைவர் சு.மாதவன் அவர்களுக்கும் விருது வழங்கிச் சிறப்பிக்க முடிவாற்றப் பட்டது.
5.புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் முழுத் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கும் விருதுகள் வழங்கிச் சிறப்பிக்க முடிவாற்றப் பட்டது.
6.ஆண்டு விழாவி்ல் மன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் இன்னிசை, வழக்காடுமன்றம் ( 60 நிமிட) கலை நிகழ்ச்சி நடத்த முடிவாற்றப் பட்டது.
7. விழாச் செலவினங்களை மரகதவள்ளி அறக்கட்டளை மற்றும் மன்ற உறுப்பினர்கள் பகிர்ந்துகொள்வது என முடிவாற்றப் பட்டது.
தீர்மானங்களை மன்ற நிருவாகி முன்மொழிய தீர்மானங்கள் மீது உறுப்பினர்கள் விவாதிக்க தீர்மானங்கள் இறுதி வடிவம் பெற்றன..
நிறைவாக மன்றச் செயலாளர் சிதம்பர ஈசுவரன் நன்றியுரையாற்றினார்.

புதன், 20 பிப்ரவரி, 2013
வெள்ளி, 15 பிப்ரவரி, 2013
புதுக்கோட்டை இளங்கோவடிகள் இலக்கிய மன்றத் தொடக்க விழா, 26, 27-1.2 013 ஆகிய இரு நாள்கள் புதுக்கோட்டை எஸ்.வி.எஸ். சீதையம்மாள் திருமண அரங்கி்ல் நடை பெற்றது.
26.01.2013 மாலை கருணாகரன் குழுவினரில் மங்கள இசை நிகழ்வினைத் தொடர்ந்து இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தின் துணைத் தலைவர் திரு சுப்பிரமணிய காடுவெட்டியார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.இளங்கோவடிகள் மன்றத் தலைவர் திரு. முரு. வைரமாணிக்கம் அவர்கள் தலைமை தாங்கினார்.
அதனையடுத்து புலவர் தி.சு.மலையப்பன் அவர்கள் மன்றக் கொள்கை விளக்கமளித்தார். தொடக்க உரையினை திரு. சேகர் அவர்கள் ஆற்றினார். சிலப்பதிகாரப் பாடல் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றோர்க்கு புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா. அருள்முருகள் அவர்கள் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
இரவு 8.00 மணிக்கு மாவட்ட வர்த்தகர் கழகத் தலைவர் அறமனச் செம்மல் சீனு.சின்னப்பா அவர்கள் தலைமையில்,
புதுகை மணிச்சுடர் கலைக் கூடம் வழங்கிய புலவர் பொன்.க. வின் “சிலம்பின் சிலிர்ப்பு“ என்னும் காப்பிய நாடகம் நடைபெற்றது.
இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் கொலைக்களக் காதை முதல் வழக்குரை காதை வரையிலான நிகழ்வுகள் மேடை நாடக வடிவில் அரங்கேறியது. முத்தமிழ்ப் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் மேடைக்கதை, உரையாடல். பாடல்களை ஆக்கி இயக்கி இருந்தார்.
அந்நாடகத்தி்ல் , கண்ணகியாக புலவர்.இரா.நாகலெட்சுமி, கோவலனாக புலவர் மகா.சுந்தர், பாண்டியன் நெடுஞ்செழியனாக பொன்.க.மதிவாணன், கோப்பெருந்தேவியாக கவிஞர் செ.சுவாதி, மாதரியாக கவிஞர் ஆர்.நீலா, பொற்கொல்லராக கவிஞர். வீ.கே.கஸ்தூரிநாதன், அமைச்சராக நா.செந்தில்பாண்டியன், ஊர்க்காப்புப் படைத் தளபதியாக சிதம்பர ஈசுவரன், ஒறுப்புப் படையாளனாக நா.மணிகண்டன், பொற்கொல்லரின் உதவியாளர் துருத்தி மற்றும் கோட்டைவாயில் காப்பாளராக இராச.செய்சங்கர், உதவியாளர் திருத்தி மற்றும் வாயில் காப்பாளராக சு.இராசேந்திரன், அந்தப்புர வாயில்காப்பாளராக கவிஞர் கண்ணதாசன், அரசவை வாயில் காப்பாளராக சொ.இளங்கோ, அரசவை நாட்டிய மங்கையாக செல்வி பா.ரூபபர்வதா. வழிப்போக்கர்களாக புலவர் மு.பா, செம்பை மணவாளன் ஆகியோர் பங்கேற்று நடித்திருந்தனர். உடைகள் மற்றும் ஒப்பனை செய. சண்முகராசாவும் இசையினை சு.இராசசேகர், மு.எழிலரசன் ஆகியோரும் செய்திருந்தனர்.
அரங்கப் பொறுப்பினை ஆ.குமார், செ.பாசுகர், வெ.பரமசிவம், மஸ்தான் பக்ருதீன் ஆகியோர் ஏற்றிருந்தனர், பின் குரல் கவிஞர் கீதா மற்றும் மு.பா.
நாடகக் காட்சிகளை செல்வா ஒளிப்பதிவு செய்தார்.. ஒளி, ஒலி அமைப்பினை புதுகை தனலெட்சுமி செய்திருந்தார்.
72 நிமிடங்கள் பார்வையாளர்களை மேடை நோக்கி ஈர்த்து வைத்த அளவில் நாடகம் சிறப்பாக இருந்தது. பங்கேற்றோர்க்கு முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா. அருள்முருகள் பாராட்டி. நினைவுக் கேடயங்களை வழங்கினார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)