ஞாயிறு, 2 ஜூன், 2013

மணிமன்ற 49 ஆவது ஆண்டுவிழா-திட்டமிடல் கூட்டம்

                 02.06.2013 மாலை மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் 49 ஆவது ஆண்டு திட்டமிடல் கூட்டம் புதுக்கோட்டையில் மன்றத் தலைவர் திரு பொன்.பாலசுப்பிர மணியன் அவர்கள் தலைமையி்ல் நடைபெற்றது.
                 கவிஞர் ஆர்.நீலா வரவேற்புரையாற்றினார்.
தலைவர் 49ஆவது ஆண்டுவிழா பற்றிய முன்னுரை வழங்கினார். மன்ற நிருவனர் புலவர் பொன்.கருப்பையா ஆண்டுவிழாத் திட்டங்களை முன்வைத்து விளக்கினார். கருத்துகள் மீதான விவாதங்களுக்குப் பிறகு கீழ்க்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப் பட்டன.
          1 .மன்ற 49 ஆவது ஆண்டுவிழாவினை எதிர்வரும் 20.07.2013 அன்று வழக்கம்போல் எஸ்.வி.எஸ்.சீதையம்மாள் திருமண அரங்கில் நடத்துவது.
         2. ஆண்டுவிழாவில் 2013 மேல்நிலை, இடைநிலை அரசு பொதுத்தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அரசு, அரசுநிதிஉதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விருதுகள் வழங்குவது.
         3.நகர எல்லைக்குட்பட்ட அரசு, அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை, இடைநிலை 2013 அரசு பொதுத்தேர்வுகளில்  பள்ளி வாரியாக முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்குவது.
         4.புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில், 2013 அரசு பொதுத்தேர்வுகளில் . மேல்நிலை,
இடைநிலைத் தேர்வுகளில்  முழுத்தேர்ச்சி பெற்ற அரசு,அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்குவது.
         5.சண்முகநாதன் பொறியியல் கல்லூரி புதிய கண்டுபிடிப்புக்கான மாணவர் சாதனையாளர் மூவர்க்கும், தச்சன்குறிச்சி இளம் விஞ்ஞானி மாணவர் ஒருவருக்கும் விருதுகள் வழங்குவது.
         6. செம்மொழி இளம் தமிழறிஞர் விருது  பெற்ற மாமன்னர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் சு. மாதவன் அவர்களைப் பாராட்டி விருது வழங்குவது.
         7.ஆண்டுவிழாவில் கவிஞர் ஆர் நீலா ஒருங்கிணைப்பில் மன்ற உறுப்பினர் எழுவர் பங்குபெறும் கல்வி விழிப்புணர்வு நாடகம் (30 நிமிடங்கள்) மற்றும் சிதம்பர ஈசுவரன் பங்கேற்கும் இருகுரல் இன்னிசை நிகழ்ச்சியை(15 நிமிடம்) நடத்துவது.
        8. ஆண்டுவிழாச் செலவினங்களுக்கு மரகதவள்ளி அறக்கட்டளையின் பங்களிப்பு நிதி( ரூ5000) உடன் மன்ற உறுப்பினர்கள் தலா ரூ 1000 வழங்குவது என முடிவாற்றப்பட்டது.
         9.விழாப் பணிக்குழு கடந்த ஆண்டு போலவே இவ்வாண்டும் செயல்படுவது.
       10.விழாவிற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அரசு உயர் அலுவலர், சமூக ஆர்வலர் ஐவர் ஆகியோரை அழைப்பது.

ஊரக வளர்ச்சி வங்கி இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட மன்ற உறுப்பினர்                                   திரு நா. மணிகண்டன் அவர்கள் பாராட்டப் பட்டார்.
நிறைவில் மன்றச் செயலாளர் திரு.சித.ஈசுவரன் நன்றி கூறினார்.

வியாழன், 9 மே, 2013

மன்ற மார்ச்சுத் திங்கள் கூட்டம்.

                மணிமன்றத்தின் திங்கள் கூட்டம் 30.03.2013 அன்று விடுதியில் மன்றத்தலைவர் திரு பொன்.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமையி்ல் நடைபெற்றது. 
மன்றத் துணைச் செயலாளர் புலவர் மகா.சுந்தர் அவர்கள் வரவேற்புரையாற்றினார். 
புதிய உறுப்பினராக கவிஞர் சுவாதி மன்றத்தில் இணைந்தார்.
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

              1. ஈழத்தமிழர் இனப் படுகொலைத் தொடர்பாக ஐ.நா.பாதுகாப்புசபை கொண்டு வரும் தீர்மானத்திற்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டுமென்றும். அதற்காக தமிழகமெங்கும் நடக்கும் மாணவர் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவினை மன்றம் அளிப்பது எனத் தீர்மானிக்கப் பட்டது.
             2.“சிலம்பின் சிலிர்ப்பு “ காப்பிய நாடகத்தை வெளி அரங்கி்ல் நடத்த, இயக்குநர் நடிகர்கள் இசைவிற்கேற்ப முடிவு செய்வது எனத் தீர்மானிக்கப் பட்டது.
            3. மன்றத்தி்ன் 49 ஆவது  ஆண்டுவிழாவினை  சூலைத்திங்கள் மூன்றாம் வாரத்தில் நடத்துவது.
அவ்விழாவில் கடந்த ஆண்டினைப் போலவே புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு, மற்றும் நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகளி்ல்  பயின்று 2013ல் 10,12 அரசுப் பொதுத் தேர்வுகளி்ல் பள்ளி அளவி்ல் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், வருவாய் மாவட்ட அளவி்ல் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கிச் சிறப்பிப்பது என்றும்  முடிவாற்றப் பட்டது.
           4.அவ்விழாவில் மாணவச் சாதனையாளர் மூவருக்கும், இளம் செம்மொழி அறிஞர் விருது பெற்ற முனைவர் சு.மாதவன் அவர்களுக்கும் விருது வழங்கிச் சிறப்பிக்க முடிவாற்றப் பட்டது.
           5.புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் முழுத் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கும் விருதுகள் வழங்கிச் சிறப்பிக்க முடிவாற்றப் பட்டது.
          6.ஆண்டு விழாவி்ல் மன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் இன்னிசை, வழக்காடுமன்றம் ( 60 நிமிட) கலை நிகழ்ச்சி நடத்த முடிவாற்றப் பட்டது.
         7. விழாச் செலவினங்களை மரகதவள்ளி அறக்கட்டளை மற்றும் மன்ற உறுப்பினர்கள் பகிர்ந்துகொள்வது என முடிவாற்றப் பட்டது.
 தீர்மானங்களை மன்ற நிருவாகி முன்மொழிய தீர்மானங்கள் மீது உறுப்பினர்கள் விவாதிக்க தீர்மானங்கள் இறுதி வடிவம் பெற்றன..
நிறைவாக மன்றச் செயலாளர் சிதம்பர ஈசுவரன் நன்றியுரையாற்றினார்.

புதன், 20 பிப்ரவரி, 2013

சிலம்பின் சிலிர்ப்பு-நாடகம்

தி.பி.2044 சுறவம் 13 ஆம் நாள் காரிக்கிழமை (26.01.2013) , புதுக்கோட்டை இளங்கோவடிகள் இலக்கிய மன்றத் தொடக்க விழாவில் , புதுக்கோட்டை மணிச்சுடர் கலைக்கூடம்  வழங்கிய, பாவலர் பொன்.க.இயக்கிய “ சிலம்பின் சிலிர்ப்பு“ நாடகத்தின் சில காட்சிகள்.

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

                புதுக்கோட்டை இளங்கோவடிகள் இலக்கிய மன்றத் தொடக்க விழா, 26, 27-1.2 013 ஆகிய இரு நாள்கள் புதுக்கோட்டை எஸ்.வி.எஸ். சீதையம்மாள்  திருமண அரங்கி்ல் நடை பெற்றது. 
                     26.01.2013 மாலை  கருணாகரன் குழுவினரில்  மங்கள இசை நிகழ்வினைத் தொடர்ந்து  இளங்கோவடிகள் இலக்கிய மன்றத்தின் துணைத் தலைவர் திரு சுப்பிரமணிய காடுவெட்டியார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.இளங்கோவடிகள் மன்றத் தலைவர் திரு. முரு. வைரமாணிக்கம் அவர்கள் தலைமை தாங்கினார்.
                   அதனையடுத்து புலவர் தி.சு.மலையப்பன் அவர்கள் மன்றக் கொள்கை விளக்கமளித்தார்.  தொடக்க உரையினை திரு. சேகர் அவர்கள் ஆற்றினார். சிலப்பதிகாரப் பாடல் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றோர்க்கு புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா. அருள்முருகள் அவர்கள் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
இரவு 8.00 மணிக்கு மாவட்ட வர்த்தகர் கழகத் தலைவர் அறமனச் செம்மல் சீனு.சின்னப்பா அவர்கள் தலைமையில்,
புதுகை மணிச்சுடர் கலைக் கூடம் வழங்கிய புலவர் பொன்.க. வின் “சிலம்பின் சிலிர்ப்பு“ என்னும் காப்பிய நாடகம் நடைபெற்றது.
இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் கொலைக்களக் காதை முதல் வழக்குரை காதை வரையிலான நிகழ்வுகள் மேடை நாடக வடிவில் அரங்கேறியது. முத்தமிழ்ப் பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் மேடைக்கதை, உரையாடல். பாடல்களை ஆக்கி இயக்கி இருந்தார்.
                  அந்நாடகத்தி்ல் , கண்ணகியாக  புலவர்.இரா.நாகலெட்சுமி, கோவலனாக புலவர் மகா.சுந்தர், பாண்டியன் நெடுஞ்செழியனாக பொன்.க.மதிவாணன், கோப்பெருந்தேவியாக கவிஞர் செ.சுவாதி,  மாதரியாக கவிஞர் ஆர்.நீலா, பொற்கொல்லராக கவிஞர். வீ.கே.கஸ்தூரிநாதன், அமைச்சராக நா.செந்தில்பாண்டியன், ஊர்க்காப்புப் படைத் தளபதியாக சிதம்பர ஈசுவரன், ஒறுப்புப் படையாளனாக நா.மணிகண்டன், பொற்கொல்லரின் உதவியாளர் துருத்தி மற்றும் கோட்டைவாயில் காப்பாளராக இராச.செய்சங்கர், உதவியாளர் திருத்தி மற்றும் வாயில் காப்பாளராக சு.இராசேந்திரன், அந்தப்புர வாயில்காப்பாளராக கவிஞர் கண்ணதாசன், அரசவை வாயில் காப்பாளராக சொ.இளங்கோ, அரசவை நாட்டிய மங்கையாக செல்வி பா.ரூபபர்வதா. வழிப்போக்கர்களாக புலவர் மு.பா, செம்பை மணவாளன் ஆகியோர் பங்கேற்று நடித்திருந்தனர். உடைகள் மற்றும் ஒப்பனை செய. சண்முகராசாவும் இசையினை சு.இராசசேகர்,  மு.எழிலரசன் ஆகியோரும் செய்திருந்தனர். 
                       அரங்கப் பொறுப்பினை ஆ.குமார், செ.பாசுகர், வெ.பரமசிவம், மஸ்தான் பக்ருதீன் ஆகியோர் ஏற்றிருந்தனர், பின் குரல் கவிஞர் கீதா மற்றும் மு.பா. 
நாடகக் காட்சிகளை  செல்வா ஒளிப்பதிவு செய்தார்.. ஒளி, ஒலி அமைப்பினை புதுகை தனலெட்சுமி செய்திருந்தார். 
                    72 நிமிடங்கள் பார்வையாளர்களை மேடை நோக்கி ஈர்த்து வைத்த அளவில் நாடகம் சிறப்பாக இருந்தது. பங்கேற்றோர்க்கு முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா. அருள்முருகள் பாராட்டி. நினைவுக் கேடயங்களை வழங்கினார்.



செவ்வாய், 9 அக்டோபர், 2012

மணிமன்றப் பொறுப்பாளர்கள் தேர்தல்

மணிமன்றத்தின் 2012-14 ஆண்டிற்கான பொறுப்பாளர்கள் தேர்தல்                    23.09.12 அன்று 330பெரியார் நகர் இல்லத்தில் நடைபெற்றது. மன்ற நிருவாகி பாவலர் பொன்.கருப்பையா அவர்கள் தேர்தல் ஆணையாளராக இருந்து தேர்தலை நடத்தினார்.  புதிய பொறுப்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
தலைவர்                          - திரு. பொன்.பாலசுப்பிரமணியன் எம்.ஏ.எம்.ஏ.,
செயலாளர்                      - திரு. சிதம்பர ஈசுவரன் எம்.ஏ., பி.எட்., டி.ஏ.எஸ்
பொருளாளர்                   - திரு. சுப.இராசேந்திரன்.
துணைத்தலைவர்கள் - 1. புலவர் மு.பாலசுப்பிரமணியன் எம்.ஏ.,  எம்.எட்.
                                                                    2. திரு.நா.செந்தில் பாண்டியன் பி.ஏ.,
துணைச் செயலாளர்கள் - 1. புலவர் மகா.சுந்தர் எம்.ஏ.,எம்,எட்,
                                                         2.கவிஞர் ரெ.சு.காசிநாதன் எம்.எஸ்ஸி., எம்.எட்.
செயற்குழு உறுப்பினர்கள் - 1. திரு.வெ.பரமசிவம்                                                                                                                     2.திரு மா.கண்ணதாசன்                                                                                                              3.கவிஞர்.வீ.கே.கஸ்தூரிநாதன் எம்.ஏ.,எம்.எட்.,                                                              4.திரு.இரா.செல்லையா பி.ஏ.,                                                                                                                
                                                             5. கவிஞர் ஆர்.நீலா.
தேர்தல் ஆணையர் முன் புதிய பொறுப்பாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
பின்னர் கீழ்க்கண்ட முடிவுகள் மேற்கொள்ளப் பட்டன. 
1.தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக எவ்வித அறிவிப்புமின்றி  மன்றச் செயல்பாடுகளில் கலந்து கொள்ளாமலும் சந்தா செலுத்தாமலும் உள்ள கீழ்க் கண்டவர்கள் மன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் செய்ய மன்றம் முடிவு செய்கிறது 1. திரு.அய்.பிரகாசம் 2. திரு.அன்பு இரவிக்குமார். ஆகியோர்.
2. இவ்வாண்டில் கவிதை, நாடகப் பயிற்சிப் பட்டறை நடத்துவது
3.திங்கள் இயல்புக் கூட்டங்கள் ஒவ்வொரு திங்கள் முதல் சனிக்கிழமை மாலை நேரத்தில் நடத்துவது.4. திங்கள் கூட்டங்களில் சமூக மேம்பாட்டு சிந்தனைக் கருத்துகள் கலந்துரையாடல் நடத்துவது.
புதிய பொறுப்பாளர்கள் சார்பில் புலவர் மு.பா.அவர்கள் நன்றி கூறினார்.